×

தற்காலிக ஓட்டுநர் நியமனத்துக்கு எதிர்ப்பு: தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: அரசு  விரைவு போக் குவரத்துக் கழகத்தில்  தற்காலிகமாக 400 ஓட்டுநர்களை நியமனம் செய்வது தொடர்பாக வெளியிடப்பட்ட டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு 400 ஓட்டுநர்களை தற்காலிகமாக ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் நியமிக்க ஒப்பந்தம் கோரப்பட்டு கடந்த செப்.14ம் தேதி ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதற்கு அரசியல் கட்சியினரும் தொழிற்சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்யக் கூடாது என வலியுறுத்தி, சென்னை, பல்லவன் சாலையில் உள்ள விரைவு போக்குவரத்துக் கழகத் தலைமையகம் முன் தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். அப்போது இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் அளித்த பேட்டி.3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. அதில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமிப்பதற்கான நடவடிக்கையை நிர்வாகம் முன்னெடுத்துள்ளது. நிரந்தரத் தன்மை உள்ள வேலைகளை ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் அளிக்க கூடாது என தொழிலாளர் சட்டமும் தெளிவுபடுத்துகிறது. மேலும், இது போக்குவரத்துக் கழகங்களை பாதிப்பதோடு, பயணிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையை உருவாக்கும். எனவே, நேரடியாக காலிப் பணியிடங்களை நிர்வாகம் நிரப்ப வேண்டும். இதே போல் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடமும் நிரப்பப்பட வேண்டும்….

The post தற்காலிக ஓட்டுநர் நியமனத்துக்கு எதிர்ப்பு: தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Trade unions ,Chennai ,Government Rapid Transit Corporation ,unions ,Dinakaran ,
× RELATED குடோனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு...